முருக பக்தர்களுக்கு சர்பத் வழங்கிய இஸ்லாமியர்கள்
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சர்பத் மற்றும் குடிநீர் வழங்கினார்கள்;
மதுரை திருப்பரங்குன்றம் பெரியத வீதியில் உள்ள ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் சார்பாக இன்று (ஜூலை .14) திருப்பரங்குன்றம் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு குடிநீரும் சர்பத் வழங்கினார்கள். மேலும் பெண் பக்தர்களுக்கு கழிப்பறை வசதியும் பள்ளிவாசலுக்குள் அமர்ந்து உணவருந்த இடவசதி செய்து கொடுத்திருந்தனர் . இது மத நல்லிணத்திற்கான நிகழ்வாக உள்ளது.