கும்பாபிஷேகம் காண வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக எம்எல்ஏ.
மதுரை திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அதிமுக எம்எல்ஏ சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது;
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகம் இன்று (ஜூலை.14) அதிகாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் நகரில் பார்க்கும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் காலை முதல் மாலை வரை சைவ உணவு அன்னதானம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் வழங்கப்பட்டது . இதுபோல் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் பல்வேறு திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.