இடஒதுக்கீடு போராட்டம்: பாமக ஆலோசனை.

பரமத்தி வேலூரில் இடஒதுக்கீடு போராட்டம் பாமக ஆலோசனை கூட்டம்.;

Update: 2025-07-14 14:40 GMT
பரமத்தி வேலூர், ஜூலை 13:  பரமத்தி வேலூரில் நாமக்கல்  கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் இடஒ துக்கீடு போராட்டத்தில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜூலை 20-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் நாமக்கல் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாமக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்புச் செயலாளர் பி.கே.செந்தில்குமார், மாநில இளைஞர் சங்க செயலாளர் சா.வடிவேலன், நாமக்கல் மத்திய மாவட்டத் தலைவர் தினேஷ்பாண்டியன், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் புகழூர் சுரேஷ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பிரேம்நாத், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  சேலம் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மு.கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், கரூர்,நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 10 ஆயிரம் பேர் 200 வாகனங்களில் செல்வதாகவும், நாமக்கல் மாவட் டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உறுப்பினர் சேர்க்கை அதிகளவில் நடைபெற வேண்டுமெனவும், பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நிறுத்துவது எனவும்பல் வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். இதில், நாமக்கல்,கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

Similar News