ஜெயங்கொண்டத்தில் எடப்பாடி வருகையை ஒட்டி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணி.

ஜெயங்கொண்டத்தில் எடப்பாடி வருகையை ஒட்டி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2025-07-15 02:44 GMT
அரியலூர், ஜூலை.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகருக்கு அஇதிமுக பொதுச்செயலாளரும்,முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை, கடைவீதி, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். சாலை முழுவதும் உள்ள மணல்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தியும் சாலை ஓரங்களில் உள்ள கூண்டுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

Similar News