காமராஜர் பிறந்த தின ஊர்வலம்
மதுரை உசிலம்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்த தின ஊர்வலம் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து இன்று (ஜூலை.15) ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறந்த நாளை கொண்டாடினர்கள் . இந்த ஊர்வலம் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தொடங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவு செய்தனர்.