காமராஜர் உருவப் படத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை

காமராஜர் உருவப் படத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-07-15 09:08 GMT
அரியலூர், ஜூலை 15: மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, அக்கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர்தூவி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர். தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் எனும் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக திங்கள்கிழமை இரவு அரியலூர் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கு ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவ்விடுதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். :

Similar News