உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் படை பயிற்சி முகாம்

உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் படை பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2025-07-15 09:54 GMT
அரியலூர் ஜூலை.15- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக ஒரு தனியார் மண்டபத்தில் இளைஞர்களுக்கான தொண்டர் படை பயிற்சி முகாம் நடைபெற்றது. காத்தவராயன் தலைமை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில பொருளாளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார் .தொண்டர் படை பயிற்சியாளர் கார்த்திக் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நடராஜன் துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முகாம் இளைஞர்களுக்கு இடையே சமூகப் பொறுப்பும் அரசியல் விழிப்புணர்வும் ஏற்படுத்தியது. முகாமின் முக்கிய நோக்கம் நாட்டில் முன்னெடுக்க வேண்டிய நவீன சமூகப் போராட்டங்கள் குறித்தும் ஒழுக்கம் ஒத்துழைப்பு திட்டமிடல் தன்னலமற்ற செயல் கட்டமைப்புகள் குறித்து தெளிவாக பயிற்சி வழங்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமநாதன் தா.பழூர் ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி, லோகநாதன் ராதாகிருஷ்ணன் முகாமில் பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தி பேசினர். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சுரேஷ்குமார் அஜித்குமார் தாமரைச்செல்வன் ஆகாஷ் ஆதித்யவர்ஷன் ஜனார்த்தனன் விஜய் வல்லவன் ராஜேஸ்வரி பாலமுருகன் தமிழ் மொழி வேல்முருகன் ராதாகிருஷ்ணன் ஹானஸ்ட்ராஜ் சேரஅரசு பாண்டியன், சந்தோஷ் குமார் சிபிராஜ் ஆதி ஆனந்தகுமார் ராமன் மணிகண்டன் பரணிதரன் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

Similar News