தமிழக வெற்றி கழகம் சார்பில் காமராஜருக்கு மாலை அணிவித்த மரியாதை !
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சூலூர் காமாட்சிபுரத்தில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சூலூர் காமாட்சிபுரத்தில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் எஸ். பாபு தலைமையில், நகரச் செயலாளர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சூலூர் தெற்கு, வடக்கு, சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, மகளிர் அணியினர், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.