"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
மதுரை மேலூரில் இன்று உங்களிடம் ஸ்டாலின் திட்டம் முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார்;
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட, சந்தைப்பேட்டை சமுதாயக் கூடத்தில் இன்று (ஜூலை.15) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து, துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டார். அங்கு பெறப்பட்ட மனுவுக்கு உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம், மேலூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில் ரூபாய் 6.00 இலட்சம் மதிப்பிலான கடன் உதவி பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், மேலூர் நகராட்சி சேர்மன், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.