வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும்

ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை;

Update: 2025-07-15 10:57 GMT
நாகை மாவட்டம் கீழையூர் மேற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்மணச்சேரி கிளைகள் சார்பில், வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து, நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, கிளைச் செயலாளர்கள் வீ.சிவராமன், சி.விஜய் ஆகியோர் தலைமை வகித்தனர். வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான மக்கள் விரோத போக்கை கண்டித்தும், அரசால் வழங்கப்படும் வீடுகளை ஒருவரின் பெயரிலோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ வழங்குவதை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தடுத்து ஒரு பயனாளிக்கு ஒரு வீடு என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அரசால் வழங்கப்படும் வீடுகளை அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வெண்மணச்சேரி பகுதியில் இயங்கி வந்த ஏ-21 என்ற பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் வீ.சுப்பிரமணியன், கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் விளக்கிப் பேசினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், வருவாய் ஆய்வாளர் மேகலா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். ஒரு வார காலத்திற்குள் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்வது, நூலகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இ -சேவை மையத்திற்கு இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில், கிளை உறுப்பினர்கள் கே.விஜயகுமார், ஏ.வி.எம்.ஜெயம், டி.வடிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ‌

Similar News