பள்ளி மாணவனை பாலியல் தொல்லை செய்த வாலிபர் கைது!
சூலூர் அருகே பள்ளி மாணவனை பாலியல் தொல்லை செய்ய முயன்று, தலையில் தாக்கிய வழக்கில் வசந்தகுமார் (23) கைது செய்யப்பட்டார்.;
சூலூர் அருகே பள்ளி மாணவனை பாலியல் தொல்லை செய்ய முயன்று, தலையில் தாக்கிய வழக்கில் வசந்தகுமார் (23) கைது செய்யப்பட்டார். மாணவன் சபரி, லிஃப்ட் கேட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த வசந்தகுமார், அவனை ஆள் நடமாட்டம் இல்லாத வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மறுத்த மாணவனை மரக்கட்டியால் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வசந்தகுமாருக்கு எதிராக போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.