கணவர் மீது ஆடியோ ஆதாரத்துடன் மனைவி புகார்!

கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இரண்டாவது திருமணம் செய்திருப்பதாகவும் ஆடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-07-15 11:26 GMT
கோவை பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜசாயிஶ்ரீ (39), தனது கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இரண்டாவது திருமணம் செய்திருப்பதாகவும் ஆடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களை ஹேக் செய்து ஆபாசப் படங்கள் பதிவேற்றுவதாக மர்ம நபர் மிரட்டல் விடுப்பதாகவும், ₹12 லட்சம் பணம் மற்றும் 86 கிராம் நகையை மீட்டு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். கணவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மற்ற பெண்களும் ஏமாறக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News