கோவை சித்திரை சாவடியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
நொய்யல் ஆற்றில் அமைந்துள்ள சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூவர் குழுவில் கார்த்திக் (வயது 28) என்பவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
கோவை தொண்டாமுத்தூர் அருகே நொய்யல் ஆற்றில் அமைந்துள்ள சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூவர் குழுவில் கார்த்திக் (வயது 28) என்பவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். உடனிருந்த நண்பர்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்க, கார்த்திக்கின் உடல் மீட்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய 9-ஆம் வகுப்பு மாணவர் மற்றும் தினேஷ் (26) ஆகியோர் போலீசாரிடம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தடுப்பணையில் குளிக்கக்கூடாது என்ற எச்சரிக்கைகள் இருந்தும் அவற்றை மீறி தொடர்ந்து இதுபோன்ற மரணங்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது.