உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் கல்விவளர்ச்சி நாள்

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் கல்விவளர்ச்சி நாள்;

Update: 2025-07-15 12:51 GMT
அரியலூர் ஜூலை.15- உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123ஆவது பிறந்ததினவிழா கல்விவளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவர் செவ்வேள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். ஆசிரியர் சாந்தி கிங்மேக்கர் காமராஜர் என்ற தலைப்பில் அவர் ஆட்சிகாலத்தின் சாதனைகள், மதிய உணவுத்திட்டம், தலைவர்களை உருவாக்கிய தலைவர், படிக்காத மேதை என்றெல்லாம் போற்றக்கூடிய தலைவரை வாழ்நாளில் என்றும் மறவோம் என்றார், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி, கலைத்திருவிழாவில் வட்டார அளவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது, ரூ, 1200 மதிப்பில் பரிசுபொருளை ஆசிரியர் இராஜசேகரன் வழங்கினார், மேலும் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் சமூக ஆர்வலர் ஜெயராமன் இனிப்பு வழங்கி சிறப்பித்தார்,(2024-2025)ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சமுக அறிவியல் பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் பெற்ற ரம்யா,அபிராமி, பிரேமா பாடம் போதித்த ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு பரிசுப் வழங்கி பாரட்டினார், மதிப்பெண் எடுக்க ஊக்கபடுத்திய ஆசிரியர் கவிதாவை தலைமையாசிரியர் வாழ்த்தி சிறப்பு செய்தார், நிகழ்வில் ஆசிரியர்கள் வனிதா,மஞ்சுளா,வளர்மதி, அமுதா, பூசுந்தரி, சத்யா, அருட்செல்வி, சங்கீதா,மரகதம், சுரும்பார்குழலி, உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வை தமிழாசிரியர் இராமலிங்கம் ஒருங்கிணைத்தார், முடிவில் கணித ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.

Similar News