மதுரை அருகே ஆவியூரில் தவெக மாநாடு நடத்த திட்டம்
மதுரை அருகே ஆவியூரில் தவெக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.;
சென்னையில் இருந்து இன்று (ஜூலை.15) இரவு விமானம் மூலம் மதுரைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வந்தடைந்தார். மதுரை அடுத்த ஆவியூர் பகுதியில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரை வந்த புஸ்ஸி ஆனந்த் மாவட்ட எஸ்பி அலுவலகம் அல்லது மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டிற்கான அனுமதி குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது