அரசு மகளிர் பள்ளி சுற்றுச்சுவர் பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் 36 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி;
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே புதிதாக 21 லட்சம் ரூபாய் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள இ சேவை மையம் கட்டிடத்தினை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள மற்றொரு அறையினையும் திறந்து வைத்தார். குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியினை சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 136 மீட்டர் சுற்றளவு கொண்ட மதில் சுவர் உயரம் அதிகரிக்கப்பட உள்ளது.