காமராஜ் பிறந்தநாள் விழா கோலாகலம்
குமாரபாளையத்தில் காமராஜ் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தது.;
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் காமராஜ் பிறந்த நாள் விழா தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. இதில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு, சமூக ஆர்வலர் சித்ரா பரிசுகள் வழஙகினார். காமராஜ் புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் காமராஜ், காந்தியின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சுப்ரமணி, சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை காந்தரூபி, சேவை மைய தலைவர் காந்தி நாச்சிமுத்து தலைமை வகித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த தீக்சிதா, சுபஸ்ரீ, ஆகியோருக்கு 5 ஆயிரம், 3 ஆயிரம் பண முடிப்புகள்,கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதே பள்ளியில் தமிழ் சிந்தனை பேரவை சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு அமைப்பாளர் ரமேஷ்குமார் தமிழ் சுடர் விருது வழங்கினார். விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த விழாவில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.