சிவன்மலையில்  தங்கத்தேர் புறப்பாடு

சிவன்மலையில்  தங்கத்தேர் புறப்பட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் ;

Update: 2025-07-16 00:31 GMT
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது என வரலாற்றில் கூறப்படுகிறது. இக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழா ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு வழிபட்டு செல்வர். மேலும் சிவன்மலையில் உள்ள சிறப்புகளில் ஒன்று இங்கு வடம்பிடித்து இழுக்கப்படும் தங்கத்தேர் ஆகும். நேற்று மாலை 6 மணி அளவில் மலைமேல் உள்ள வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

Similar News