அரகண்டநல்லுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-16 04:18 GMT
அரகண்டநல்லுார் அடுத்த ஏமப்பேர் அருமலை உள்ளிட்ட பகுதிகளில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.பெஞ்சல் புயல் வெள்ளத்தால் திருக்கோவிலுார் அணைக்கட்டு, மண்மேடு உடைந்து அரகண்டநல்லுார் அடுத்த ஏமப்பேர், அருமலை, கீழக்கொண்டூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், சாலை சீரமைப்பு பணி, நில சீரமைப்பு, மீண்டும் விவசாய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரகண்டநல்லுார் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்கங்களின் அமைப்பாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அயோத்தி, ஆசிரியர் குமரவேல் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Similar News