பாணாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாணாவரத்தை அடுத்த காட்டுமூளை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கங்கன் (வயது 41), அதே பகுதியை சேர்ந்த விநாயகம் (39) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.