ஆற்காட்டில் மாடு முட்டி முதியவர் பலி
ஆற்காட்டில் மாடு முட்டி முதியவர் பலி;
ஆற்காடு டவுன் தெருவை சேர்ந்தவர் தேவன் (68). இவர், ஆற்காடு பெரியாண்டவர் கோவில் அருகில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தேவன் வீட்டின் அருகே இருந்த போது அந்த வழியாக சென்ற மாடு திடீரென தேவனை முட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.