கோவை: சூறைக்காற்றில் மரம் சாய்ந்து விபத்து!

கோவையில் அடிக்கும் சூறைக்காற்றால் நீண்ட வயதான வாகை மரம் சாய்ந்து விழுந்து விபத்து.;

Update: 2025-07-16 07:39 GMT
கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகின்றது. இதனால் பல பகுதிகளில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. நேற்று சிறுவாணி சாலை, ஆலாந்துறை அருகே ஹைஸ்கூல் புதூர் பகுதியில் பழைய வாகை மரம் ஒன்று சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. அந்த மரம் அருகிலிருந்த சைக்கிள் பழுது பார்ப்பார் கடை மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. அச்சமயம் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டுநர் மரம் விழும் சில நொடிகள் முன்பு அதனைத் தாண்டியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அருகிலுள்ள வீடொன்றில் உள்ள சி.சி.டி.வி-வில் பதிவாகியுள்ளது. அத்துடன், பழைய மரங்களை பராமரிக்கவும், இடிக்கத் தேவையான மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

Similar News