நிபா வைரஸ் பாதிப்பு இல்லை -கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
உங்களுடன் ஸ்டாலின், உங்கள் வீடு தேடி வரும் அரசு திட்டம் கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.;
உங்களுடன் ஸ்டாலின், உங்கள் வீடு தேடி வரும் அரசு திட்டம் கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கோவை வடவள்ளி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேற்று துவக்கி வைத்தார். முகாமில் வார்டு 36 மற்றும் 39 பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 42 அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், சுகாதார முகாம் மற்றும் காவல்துறை சேவைகள் உள்ளிட்டவை இந்த முகாமில் இடம் பெற்றுள்ளன. நிபா வைரஸ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது கோவையில் எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.