இந்தியா கல்வியின் மூலம் முன்னேறியுள்ளது - மயில்சாமி அண்ணாதுரை பேச்சு !

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு உரையாற்றினார்.;

Update: 2025-07-16 07:48 GMT
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா கல்வியின் மூலம் முன்னேறியுள்ளது என்றும், இன்ஜினியர்கள் அனைத்துத் துறைகளிலும் தங்களது பங்களிப்பை வழங்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார். சிந்தூர் சண்டை வெற்றிக்கு செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதலே முக்கிய காரணமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தற்போது போர்கள் இயந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பொறுப்பும் இன்ஜினியர்களின் மீதே உள்ளது என்றார். இந்தியா வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்கும் நிலையில் உள்ளது. அதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு விவசாயம் முதல் விண்வெளி வரை பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதை சரியான முறையில் கையாள்வது இன்ஜினியர்களால் தான் சாத்தியம் என்றும் அவர் விளக்கினார். தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நாசாவின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், இந்தியா தனது சொந்த ஆய்வு மையத்தை உருவாக்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் தொடங்கும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Similar News