புளியம்பட்டி அடுத்த நொச்சிக்குட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவரது மனைவி கல்பனா தேவி. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரகாஷ் அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் லோன் கலெக்சன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கல்பனா தேவி நிதி நிறுவனத்தை தொடர்புக் கொண்டு கேட்டபோது, பிரகாஷ் வேலைக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உறவினர்கள் வீட்டில் தேடியும் பிரகாஷ் கிடைக்கவில்லை. இதுகுறித்து கல்பனா தேவி, நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.