மதுரை மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்த தவெக கட்சியினர்.
மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி மாவட்ட எஸ்பியிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மனு அளித்தார்.;
மதுரை மாவட்டம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி அருகே வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்த நிலையில் இன்று( ஜூலை .16)அதிகாலை மாநாடு நடக்கும் இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிறகு மாவட்ட நிர்வாகிகளுடன் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் சென்று மாவட்ட எஸ்.பியிடம் மாநாடு நடைபெற அனுமதி கோரி மனு வழங்கினார். உடன் முக்கிய தவெக நிர்வாகிகள் இருந்தனர்.