மேலூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மேலூர் பேருந்து நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு நேற்று (ஜூலை.15) தமிழர் மக்கள் இயக்கத்தின் சார்பாக சூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கம்பூர் க.செல்வராஜ் மீது பொய்யாக புனையப்பட்டுள்ள தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய்யான வழக்கை ரத்து செய்யக்கோரியும், உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசையும்,மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் புரட்சி கழக தலைவர் அரங்க குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.