வடமாடு மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி
மதுரை கொட்டாம்பட்டி அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே, கச்சிராயன்பட்டி புதூர் கிராமத்தில் கோயில் திருவிழாவில் நேற்று முன் தினம் (ஜூலை.14) வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் காளை முட்டியதில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் பள்ளபட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் அசாருதீன் (25) சேர்க்கப்பட்டார். இவர் நேற்று (ஜூலை.15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இந்நிலையில், அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக கச்சிராயன்பட்டியை சேர்ந்த கண்ணன், அய்யாவு, அழகு, பொன்னுச்சாமி, மூவிடையப்பன் ஆகியோர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.