திருமங்கலம் சாலை விபத்தில் வட மாநில வாலிபர் பலி
மதுரை திருமங்கலம் அருகே சாலை விபத்தில் வட மாநில வாலிபர் பலியானார்.;
ஒடிசா மாநில கட்டிட தொழிலாளியான சுகுமார் டாக்கஸ் (38) என்பவர் சில நாட்களாக திருமங்கலம் டி.புதுப்பட்டி குன்னத்துாரில் கட்டட வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஜூலை .14)மதியம் திருமங்கலத்தில் இருந்து குன்னத்துாருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். ஆலம்பட்டி அருகே டேங்கர் லாரியை முந்த முயன்ற போது இருசக்கரத்தின் மீது உரசியதில் இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறிய செங்கப்படை - திருமங்கலம் பேருந்து மீது மோதியதில் சுகுமார் டாக்கஸ் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.