பெருந்துறை அடுத்த திருவெங்கடம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஹரிதா (5). இச்சிறுமி பிறந்த நாள் முதல் மிகவும் அரிதான தோல் நோய் இருந்துள்ளது. இதனால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது சிறுமி ஹரிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி, சிறுமி ஹரிதாவுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்தாள். பின்னர், பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஹரிதா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமன் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.