தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சியில் கணக்கில் வராத
ரூ.52 ஆயிரம் கைப்பற்றி ஊராட்சி செயலாளரிடம் விசாரணை;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கை நல்லூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழான 100 நாள் வேலை திட்ட பணிகளின் முறைகேடாக பயனாளிகளை சேர்த்து பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், பின்னர் பயனாளிகளிடமிருந்து குறிப்பிட்ட பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் புகார் எழுந்தது. அதன்படி கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊராட்சி அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கோப்புகள் வைக்கும் பீரோ, ஊராட்சி செயலாளரின் மேசை ஆகியவற்றில் சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.52,500 பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், இது குறித்து ஊராட்சி செயலாளர் அன்புராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.