யானை துரத்தியால் பரபரப்பு
தாளவாடி அருகேவாகனத்தை துரத்திய ஒற்றை யானையால் பரபரப்பு;
வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானை கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், உணவு தண்ணீருக்காக தேசிய நெடுஞ்சாலை ஓரம் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் தாளவாடி மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டுகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ராமாபுரம் அருகே ரோட்டில் சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக தாளவாடியில் இருந்து சாம்ராஜ் நகர் நோக்கி 4 பேர் காரில் வந்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்ததும் அந்த ஒற்றை யானை திடீரென ஆவேசம் அடைந்து அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் காரை வேகமாக பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டிய யானை பின்னர் அங்கே நின்றது. இதைப்போல் அந்த வழியாக வந்த மேலும் இரண்டு காரையும் அந்த ஒற்றை யானை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சாலையில் உலா வந்த அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு ஒட்டு அந்த வழியாக கடந்து சென்றனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். தாளவாடி மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.