அவனியாபுரத்தில் ஆனி பொங்கல் திருவிழா.
மதுரை அவனியாபுரம் மாகாளியம்மன் கோவிலில் ஆனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.;
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவிலில் அறுபதாம் ஆண்டு ஆனி பொங்கல் திருவிழா நடைபெற்றது. கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 14ஆம் தேதி திங்கட்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 15ம் தேதி செவ்வாய் கிழமை சக்திகிரகம் நகர்வலம் வந்தது 16ம் தேதிபுதன். கிழமை இன்று காலை அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் அக்கினி சட்டி, வேல் குத்துதல் நிகழ்சி அவனியாபுரம் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தது. மாலை முளைப்பாரி ஊர்வலமாக சென்று வெள்ளக்கல் கண்மாயில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மகா காளியம்மன் கோவில் நிர்வாக குழு சார்பாக கோப்பன் நாட்டாமை பூசாரி ஜெயராமன் தலைவர் வில்லடியான் செயலாளர் கணேசன் பொருளாளர் பழனி மற்றும் தண்டல் மாரி ஆகியோர் சிறப்பாக செய்தனர்.