உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குமாரபாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.;

Update: 2025-07-16 14:07 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1, 2,3 ஆகிய வார்டுகளுக்கு காவேரி நகர் செல்லவேல் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. குமாரபாளையம் நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் விஜய் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை, வருவாய் துறை, மின்சார துறை, மருத்துவத்துறை, ஆதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதார் மையங்கள், இ சேவை மையங்கள் உள்ளிட்ட 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் அவர்களது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மனு செய்த சில மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட்டது. இம்முகாமில் நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், தாசில்தார் சிவகுமார், நகராட்சி ஆணையர் (பொ) நித்தியா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News