சின்னசேலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. சின்னசேலம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், முதற்கட்டமாக 9 வார்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்த முகாமை, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் 13 அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். மாவட்ட கலெக்டர் பிரசாந்த், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரங்குகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து பதிவு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.