வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

சட்டம்;

Update: 2025-07-17 03:49 GMT
உளுந்துார்பேட்டை அடுத்த கூவாடு கிராமத்தை சேர்ந்த கலியன் மகன் மணிகண்டன், 36; இவர் கடந்த ஜூன் 23 ம் தேதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.இந்நிலையில் மணிகண்டன் பொது அமைதிக்கு பாதகமான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவரது நடவடிக்கையை கட்டுபடுத்த தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனை தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள மணிகண்டனிடம் அதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.

Similar News