திருப்போரூர் கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்;
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து 37-ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியாவுடன் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாசுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு கலைந்து இணக்கமான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும், தனது தந்தைக்கும் தனக்குமான கருத்து வேறுபாட்டை கலைந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகரை வணங்கி விட்டு மூலவர் கந்தசாமி பெருமானை வணங்கினார். முன்னதாக கோயிலுக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 400 கிராம் எடை கொண்ட 1 1/2 அடி உயரமுள்ள வெள்ளி வேலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். தொடர்ந்து, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அது குறித்து கேட்டபோது விரைவில் உங்களை சந்திக்கிறேன் என கூறிவிட்டு பேட்டியளிக்க மறுத்து புறப்பட்டு சென்றார்.