ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா;
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஒன்றியம்,கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதா தலைமை தாங்கினார் துணைத் தலைவர் மல்லிகா மற்றும் கௌசல்யா யசோதா. திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர.தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்று பேசினார் . காமராஜரின் திரு உருவ படத்திற்கு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் . மாணவர்கள் பேச்சு பாடல் ஓவியம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு ம் பரிசுகள் மற்றும் கடலைமிட்டாய் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .மகளிர் குழு சார்ந்த பிரேமா முன்னாள் எஸ்.எம்.சி தலைவர் செல்வி பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் அரசு சார்ந்த விழாக்களை கூடப்பாக்கம் பள்ளியில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடி வருவது கிராமப்புற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இறுதியாக ஆசிரியர் உஷா நன்றி கூறினார்.