காங்கயம் அருகே தீப்பிடித்து எரிந்த காற்றாலை இயந்திரம்

காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகே, தனியார் காற்றாலை தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது.;

Update: 2025-07-17 15:06 GMT
ஊதியூர் அருகே, நிழலி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலை இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த காற்றாலை இயந்திரத்தில் புதன்கிழமை இரவு 9 மணியளவில், இதன் இயந்திரப் பகுதியில் சிறிய அளவில் தீப்பிழம்பு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல இயந்திரம் முழுவதும் தீப்பற்றியதோடு, தீ இறக்கைகளுக்கும் பரவி, காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயில் கருகி எரிந்த காற்றாலையின் பாகங்கள் கீழே செல்லும் மின் கம்பிகளின் மீது விழுந்ததால், அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமான இந்த காற்றாலையின் மதிப்பு சுமார் ரூ.4 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. காற்றாலையில் தீப்பற்றிய சம்பவம் குறித்து ஊதியூர்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News