அரசு பள்ளிகளில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது

அரசு பள்ளிகளில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட்டது.;

Update: 2025-07-17 15:32 GMT
குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மற்றும் குள்ளநாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ச்சுடர் விருது குமாரபாளையம் தமிழ் சிந்தனை பேரவை மற்றும் குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ரமேஷ், பேராசிரியர் கோவை கவிதா, ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் பிரபாகரன், பொருளாளர் மாதேஸ்வரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News