மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்;

Update: 2025-07-18 08:11 GMT
மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர செயலாளர் குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் பாலாஜி, நகராட்சி ஆணையர் அபர்ணா ஆகியோர் முன்னிலையில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் இந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Similar News