புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு
மதுரை திருப்பாலையில் புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.;
மதுரை மாவட்டம் திருப்பாலை தாகூர் நகர் 6ஆவது தெருவில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரூ.17.1 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 31 புதிய மருத்துவ கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், பூமிநாதன் எம்எல்ஏ, மேயர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.