தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலி.

தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-07-18 15:25 GMT
அரியலூர், ஜூலை.19- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே  பனையடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (22) தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வசூல் செய்வதற்காக தா.பழூரிலிருந்து கோடங்குடி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே நாகமுத்து (66) என்பவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளும், சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் நாகமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய பாபு பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து சம்பவம் அறிந்த தா.பழூர்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் நாகமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மோதி சைக்கிள் சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News