இளைஞரை காரில் கடத்தியவர்களை தாராபுரத்தில் மடக்கிப் பிடித்த போலீசார்
காங்கேயம் அருகே இளைஞரை காரில் கடத்தியவர்களை தாராபுரத்தில் மடக்கிப் பிடித்த போலீசார் - 4 கைது ;
திண்டுக்கல் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்த பிரகாஷ் (30) இவர் காங்கேயம் பொன்னி நகர் பகுதியில் வசித்து மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறார் . இவரை அதிகாலை இரண்டு கார்களில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் செல்வதாக பிரகாஷின் மனைவி சிவசங்கரி (27) விரைந்து சென்று காங்கேயம் காவல் நிலையத்தில் வாகன பதிவு எண்ணுடன் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டம் கண்காணிப்பு அறையில் இருந்து அனைத்து காவல் நிலையத்திற்கும் கடத்தல் குறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் தாராபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் . வாகன சோதனையில் நிக்காத மாருதி ஷிப்ட் காரை துரத்திச் சென்று பிடித்த காவல்துறையினர் இதில் பிரகாஷ் இருப்பதை உறுதி செய்தனர் . காரில் உடன் இருந்த தென்காசி பகுதியில் சேர்ந்த விசு (37) குமார்(45), மணிகண்டன் (29), பரமசிவன் (46) காவல்துறையினர் கைது செய்து காங்கேயம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . மேலும் மற்றொரு காரில் தென்காசி பகுதியில் சேர்ந்த வெங்கடேச மூர்த்தி இருந்ததும் தெரியவந்தது . முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ் தென்காசியில் சொந்தமாக பிரின்டிங் தொழில் மற்றும் காங்கேயம் பகுதியில் மாட்டுப் பண்ணை நடத்தி வருவதாகவும் தென்காசி பகுதியில் தனியார் பைனான்ஸ் தொழில் செய்து வரும் வெங்கடேச மூர்த்தி (50) மற்றும் விசுவிடம் (38) 50 லட்ச ரூபாய்க்கு மேல் வரவு செலவில் ஈடுபட்டுள்ளதாகவும் . இதில் 8 லட்ச ரூபாய் நிலுவைத் தொகை கொடுக்க பிரகாஷ் முன் வராத காரணத்தினால். இது சம்பந்தமாக தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பிரகாஷ் பணம் கொடுக்க முன் வராததால் இவரை கத்தியை காட்டி மிரட்டி தென்காசி அழைத்துச் செல்ல முடிவு செய்து காவல் துறையிடம் நடந்ததை நான்கு பேர் தெரிவித்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரகாஷ் 8 லட்ச ரூபாய் நிலுவைத் தொகை கொடுக்காததால் தன்னை காலையில் மாட்டு பண்ணையில் கத்தியை காட்டி மிரட்டி கடத்தி வந்ததாக தெரிவித்தார்.