சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

மதுரை உசிலம்பட்டி அருகே பெண்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்;

Update: 2025-07-19 13:01 GMT
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து சமாதானம் செய்தனர்.

Similar News