புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலம் விட்டு மாநிலம் சென்று உழைக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்.;

Update: 2025-07-19 13:18 GMT
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலம் விட்டு மாநிலம் சென்று உழைக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றுபுகழாரம் சூட்டிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் தங்கள் குடும்பத்திற்குப் பணம் அனுப்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றிக்குச் சான்றாகத் திகழ்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் கோவை மாவட்டம் அரசூரில் உள்ள ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து கொண்டே படிக்கும் ஒடிசா மாணவிகளைச் சந்தித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் தும்புபத்ரா நதிக்கரைப் பகுதியிலிருந்து ஒடிசாவுக்கு வந்து குடியேறி தொழில் செய்யும் மக்கள், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்குச் சென்று தொழில் தொடங்கியவர்கள் என அனைவரும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தங்களின் வியர்வையையும், உழைப்பையும் முதலீடாகச் செலுத்தி வருகின்றனர். இங்கு வேலை செய்யும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்புவது, மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றியைப் பறைசாற்றுகிறது. மாநில எல்லைகளைக் கடந்து உழைக்கும் ஒவ்வொருவரும், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருகின்றனர். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை, மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர் இடம்பெயர்வு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன என தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News