தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, கொள்ளுக்காடு கடற்கரை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வைத்திருந்தவரை, கடலோரக் காவல் குழுமத்தினர் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலோரக் காவல் குழுமத்தினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளுக்காடு கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக ஒரு ஊதா நிறக் கேனுடன் நின்று கொண்டிருந்த, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் சேசுராஜ் என்பவரை பிடித்து விசாரித்து, அவர் வைத்திருந்த கேனை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட, 255 பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை காவலர்கள் பழனிவேல், கோபால், மணிமாறன் ஆகியோர் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து, மேல் நடவடிக்கைக்காக கடல் அட்டையுடன், சேசுராஜ் பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.