சுவாமிமலை கிராம உதவியாளரைக் கண்டித்து போராட்டம்

போராட்டம்;

Update: 2025-07-19 17:08 GMT
சுவாமிமலை கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் சுவாமிமலை பேரூராட்சி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். அப்போது அவா்கள் கூறுகையில், சுவாமிமலை கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராக உள்ள சீனிவாசன் 300 க்கும் மேற்பட்டோருக்கு போலி பட்டா கொடுத்துள்ளாா். அவா் மீது புகாா் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனா். அதற்கு வருவாய்த் துறை அலுவலா் இதுகுறித்து அவா் மீது விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Similar News