இளைஞர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை; உடலை கைப்பற்றி நகர் காவல் நிலைய போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என விசாரணை

இளைஞர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை; உடலை கைப்பற்றி நகர் காவல் நிலைய போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என விசாரணை;

Update: 2025-07-20 09:28 GMT
அருப்புக்கோட்டை சத்தியவாணிமுத்துநகர் காலணி தனியார் மதுபான பார் அருகே பெயிண்டிங் வேலை செய்து வரும் திணேஷ்(24) என்ற இளைஞர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை; உடலை கைப்பற்றி நகர் காவல் நிலைய போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என விசாரணை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சக்தியவாணி முத்து நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் திணேஷ்(24) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திணேஷ் சத்தியவாணி முத்து நகர் காலனி அருகே உள்ள தனியார் மதுபான பார் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பகுதியைச் சேர்ந்த சில நண்பர்களுடன் தினேஷ் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உடன் இருந்த நபர் ஒருவர் திடிரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தினேஷ் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த தினேஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தினேஷை கொலை செய்தது யார் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News