கிட்னி விற்பனை பாமகவினர் காவல் நிலையத்தில் மனு
பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவினர் மனு வழங்கினர்;
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர் தொழிலாளர்களின் சிறுநீரகத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள திமுகவை சேர்ந்த ஆனந்தன் என்பவர் குறித்து விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர் தலைமையில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும் பொழுது அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தோன்றுகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிபாளையத்தில் இது போன்ற புகார்கள் எழுந்து வருவதால் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநில செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட மாணவரணி தலைவர் செந்தில்நாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரோஜா , மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.கே.முருகன் , ஆலாம்பாளையம் பேரூர் அமிர்தலிங்கம், சௌந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.